dinamalar telegram
Advertisement

பட்டா கத்தியுடன் ரவுடிகள் வலம் தாம்பரம் அருகே 4 பேர் கைது

Share
தாம்பரம்-தாம்பரம் அருகே, பட்டா கத்தியை இடுப்பில் மறைத்து வைத்து வலம் வந்த ரவுடிகளை, தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பழைய 'செக் - போஸ்ட்' அருகே, தாம்பரம் போலீசார் சைக்கிளில்ரோந்து பணியில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு நின்ற ஒரு கும்பல், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றது. அவர்களை எஸ்.ஐ., கார்த்திகேயன், சக போலீசார் உதவியுடன் விரட்டிச் சென்று பிடித்தார்.பிடிபட்ட நபரிடம் சோதனை செய்ததில், அவரது இடுப்பில் ௧.௫ அடி நீளமுள்ள பட்டா கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட நபருடன் சேர்ந்து, நான்கு பேரிடம் விசாரித்தனர்.அவர்கள், புது பெருங்களத்துாரைச் சேர்ந்த தங்கதுரை, 20, நெடுங்குன்றத்தைச் சேர்ந்த அலன்ராஜ், 26, மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த பிரதீப், 21, குரோம்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ்வரன், 25, என்பது தெரிந்தது.இவர்கள், பெயின்டிங் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருவதும், லோகேஷ்வரன் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும், மற்றவர்கள் மீது தாம்பரம் காவல் நிலையத்தில், மூன்று வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.நான்கு பேரையும் கைது செய்த போலீசார்,அவர்களிடமிருந்து கத்தி, இரண்டு இருசக்கர வாகனங்கள், மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement