dinamalar telegram
Advertisement

போலீஸ் டைரி..

Share
விபத்தில் திருநங்கை மரணம்சோழவரம்: செங்குன்றம், பாடிநல்லுார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுகந்தி, 29. திருநங்கையான இவர், விஜயநல்லுார் டோல்பிளாசா பகுதியில் வரும் வாகன ஓட்டிகளிடம் காசு பெற்று, பிழைப்பு நடத்தி வந்தார்.கடந்த 23ம் தேதி இரவு, டோல்பிளாசா பகுதியில் இருந்து, பன்னீர்வாக்கம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.பெண்ணிடம் வம்பிழுத்தவர் கைதுசோழவரம்: சோழவரம் அடுத்த, செங்காளம்மன் நகரை சேர்ந்தவர் அஸ்மாபீ, 23. இவரது கணவர், சவுதியில் வேலை பார்த்து வருவதால், இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.இவரது வீட்டிற்கு எதிரில், வசித்து வரும் சூர்யா, 21, அஸ்மாபீயை சைகை மூலம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதை தட்டி கேட்ட அஸ்மாபீயை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அஸ்மாபீ அளித்த புகாரையடுத்து, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து,சூர்யாவை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement