dinamalar telegram
Advertisement

கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி

Share
உளுந்தை,-கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில், சுவாமி விவேகானந்தா அபிவிருத்தி சங்கத்தின் சார்பில், ஓராசிரியர் பயிற்சி பள்ளி நடந்து வருகிறது. இப்பள்ளியில், மகளிருக்கான தையல், கணினி போன்ற பயற்சிகளை அளிக்கும் வகையில் திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.முகாமிற்கு, ஓராசிரியர் பள்ளிகளின் கவுரவ செயலர் கிருஷ்ணமாச்சாரி, துணைத் தலைவர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக ஓராசிரியர் பள்ளி சேர்மன் எஸ்.வேதாந்தம்ஜி பங்கேற்று, பெண்களுக்கான கணினி மற்றும் தையல் பயிற்சியை துவக்கி வைத்தார்.நேற்று நடந்த பயிற்சியில் உளுந்தை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 40 பெண்கள் தையல் பயிற்சியிலும், 30 பெண்கள் கணினி பயிற்சியிலும் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement