dinamalar telegram
Advertisement

போலீஸ் டைரி

Share
80 டன் ரேஷன் அரிசி பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம், தொட்டம்பேடு அடுத்த, பசவைய்யாபாளையம் அருகே ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள், லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட சிறப்பு அதிரடி படை போலீசார், மேற்கண்ட இடத்திற்கு சென்று, சோதனை செய்தனர். அப்போது நான்கு லாரிகளில், 80 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கூலியாட்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கூலியாட்கள் தப்பி ஓடினர். போலீசார் நான்கு லாரிகள் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணைக்கு பின் ரேஷன் அரிசி மூட்டைகள் தாசில்தார் பரமேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டன.நகை, பணம் திருட்டுதிருத்தணி: திருத்தணி, எம்.ஜி.ஆர்., பகுதியில் வசிப்பவர் ரத்தினம், 65. இவர், கடந்த 21ம் தேதி, மனைவியுடன் சென்னை பெரம்பூர் விநாயகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை, ரத்தினம், மனைவியுடன் திருத்தணியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து, நான்கரை சவரன் நகை மற்றும் 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. வெள்ளத்தில் குழந்தை பலிநகரி: சித்துார் மாவட்டம், பி.டி.எம். அடுத்த, டி.சதும் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசுலு, 40. இவரது மகன்கள் ரோவந்த், 8, தேஜஸ்,4. நேற்று முன்தினம், சீனிவாசுலு இரு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மாமானார் வீடான தம்பலப்பள்ளிக்கு சென்றார். பின் அங்கிருந்து வீட்டிற்கு அதே வாகனத்தில் குழந்தைகளுடன் வந்துக் கொண்டிருந்த போது வேப்புலப்பள்ளி தரைப்பாலத்தில் வெள்ளம் சென்றது. சீனிவாசுலு இரு குழந்தைகளுடன் வாகனத்தில் தரைப்பாலத்தை கடக்க முயன்றார். அப்போது, சீனிவாசுலுக்கு பின் வாகனத்தில் அமர்ந்த தேஜஸ் தவறி வெள்ளத்தில் விழுந்து அடித்து செல்லப்பட்டார். கிராமத்தினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராட்டி குழந்தை தேஜசை பிணமாக மீட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement