dinamalar telegram
Advertisement

33,650 பேருக்கு தடுப்பூசி

Share
நகரி,;சித்துார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் நேற்று முன்தினம், ஒரே நாளில், 151 சிறப்பு முகாம்கள் அமைத்து, மொத்தம், 33,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.மேலும், 18 வயது முதல், முதியோர்கள் வரை, முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் 2,283 பேருக்கு, முதல் தவணையும், 31,367 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.மாவட்டத்தில் விரைவில் முதியோர்கள் தடுப்பூசி செலுத்த முன்வரவேண்டும். டெங்கு காய்ச்சல் மற்றும் மழை காலம் என்பதால், எளிதாக தொற்று நோய் பரவும் என்பதால், காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும்.மேலும், காய்ச்சல் வந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கிராம செவிலியர்கள் வீடு, வீடாக சென்று, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாவட்ட சுகாதார துறை அலுவலர் ஸ்ரீஹரி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement