dinamalar telegram
Advertisement

ஒதப்பை தரைப்பாலம் சேதம் போக்குவரத்து பாதிப்பால் அவதி

Share
ஊத்துக்கோட்டை--ஒதப்பை தரைப்பாலம் சேதம் அடைந்ததால், அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ஒரு வாரமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, கடந்த, 20ம் தேதி இரவு, வினாடிக்கு, 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அங்குள்ள மதகுகள் வழியே வினாடிக்கு, 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.இதனால், கொசஸ்தலை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பூண்டி அருகே உள்ள ஒதப்பை தரைப்பாலத்தில் தார் சாலை பெயர்ந்தது. பாலமும் சேதம் அடைந்ததால், அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.டூ - வீலருக்கு மட்டும்பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து தொடர்ந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருவதால், பாலத்தை ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பாலத்தின் அடியில் அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்த பின், போக்குவரத்து திறந்து விட அதிகாரிகள் முடிவெடுத்து உள்ளனர்.தற்காலிகமாக பாதசாரிகள், பைக்குகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். ஊத்துக்கோட்டையில் இருந்து, கனரக வாகனங்கள் பெரியபாளையம் வழியே திருப்பி அனுப்பப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement