dinamalar telegram
Advertisement

திருவள்ளூரில் தக்காளி ரூ.79க்கு விற்பனை

Share
திருவள்ளூர்-திருவள்ளூர், சென்னை, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில், மிக கன மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதை தொடர்ந்து தக்காளி விலை கிடுகிடுவென ஏறியது. ஒரு கிலோ, 120 - 140 ரூபாய் வரை விற்கப்பட்டது.இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை சார்பில், கிலோ, 79 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்து, விற்பனையை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் கூறுகையில், 'கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில், ஒரு கிலோ தக்காளியின் விலை, சந்தை விலையின்படி மிக குறைந்த விலையில் விற்க அரசு முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகர் பகுதியில் - நான்கு ; பொன்னேரியில் - ஐந்து மற்றும் திருத்தணியில் -மூன்று என, மொத்தம், 12 இடங்களில் மலிவு விலையில் தக்காளி விற்பனை கடை துவக்கப்பட்டு உள்ளது' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement