Load Image
dinamalar telegram
Advertisement

மனைவியை தாக்கிய கணவர் கைது

பொன்னேரி--பொன்னேரி, பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா, 25. இவரது கணவர் லட்சுமிபதி, 31. டாஸ்மாக் 'குடி'மையத்தில் வேலை பார்க்கும் இவர், குடித்துவிட்டு, வீட்டு செலவிற்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. பிரியா அங்குள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து, இரண்டு குழந்தைகளை பராமரித்து வந்தார். கடந்த 23ம் தேதி, இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பிரியாவை வழிமடக்கி, லட்சுமிபதி கையால் தாக்கியதுடன், கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார்.காயம் அடைந்த பிரியா, பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து லட்சுமிபதியை கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement