Load Image
dinamalar telegram
Advertisement

கோவில் குளத்தில் புதிய ஓடை சுந்தரேசனார் பக்தர்கள் பரவசம்

பள்ளிப்பட்டு--நெல்லிக்குன்றம் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரேசனார் கோவில் குளத்தில், ஊற்று அபரிமிதமாக சுரக்கிறது. இதனால், குளத்தில் இருந்து, ஓடையாக ஊற்று நீர் வெளியேறி வருகிறது.பள்ளிப்பட்டு அடுத்த, நெல்லிக்குன்றம் மலையடிவாரத்தில் அத்திமாஞ்சேரிபேட்டை கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் வடக்கு பகுதியில், சுந்தரேசனார் கோவில் உள்ளது. அதே வளாகத்தில் உள்ள கோவில் குளம், இதுவரை இல்லாதவிதமாக, தற்போது முழுவதுமாக நிரம்பியுள்ளது.குளத்தில் ஊற்று அபரிமிதமாக சுரந்து வருவதால், குளத்தில் இருந்து ஓடை போல், தண்ணீர் வெளியேறி வருகிறது.தண்ணீர் வெளியேறவசதியாக, இயந்திரம் கொண்டு கால்வாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீரோடை இருக்கும் இடத்தில், சிவன் கோவில் இருப்பது சிறப்பு.அந்த வகையில், சுந்தரேசனார் கோவில் குளத்தில் இருந்து, ஊற்று நீர் பிரவாகம் எடுத்திருப்பது, பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement