dinamalar telegram
Advertisement

போக்கிடம் இல்லாத ஊற்று நீர் அரசு பள்ளி வளாகத்தில் தஞ்சம்

Share
பள்ளிப்பட்டு--மலையடிவாரத்தில் அமைந்துள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்தில், ஊற்று நீர் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவர்கள் அவதி அடைந்துஉள்ளனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம், மலையடிவாரத்தில் உள்ளது. தற்போது, மலையில் இருந்து ஊற்று நீர் சுரந்து வருகிறது. இந்த ஊற்று நீர், மலையடிவாரத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது.பள்ளியின் நுழைவாயில் எதிரே, சாலையின் குறுக்கே சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு அடுத்து, கால்வாய் வசதி இல்லாததால், பள்ளியின் சுற்றுச்சுவரில் உள்ள ஓட்டை வழியாக, ஊற்று நீர், பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து வருகிறது.பள்ளி வளாகம் முழுதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மழை நீர் கால்வாயை முறையாக துார் வாரி சீரமைத்தால், இந்த நிலை ஏற்படாது என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement