dinamalar telegram
Advertisement

மொபைல் போன் திருட்டு

Share
திருமங்கலம்-திருமங்கலத்தில், வீடு புகுந்து மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.பாடி குப்பத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 38. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு, வீட்டில் இருந்த இவரது மொபைல் போன் திருடு போனது.இது குறித்து விசாரித்த திருமங்கலம் போலீசார், வீடு புகுந்து மொபைல் போன் திருடிய, மாங்காட்டைச் சேர்ந்த லட்சுமணண், 23, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.திருமங்கலம்: கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிரவீனா 22. இவர், சென்னையில் தங்கி, திருமங்கலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிகிறார்.கடந்த 14ம் தேதி இரவு பணி முடிந்து, திருமங்கலம் அருகில் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மர்மநபர் ஒருவர், இவரது மொபைல் போனை பறித்து தப்பினார்.இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்து, பழைய திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக், 23, என்பவரை நேற்று கைது செய்தனர்.கிண்டி: கிண்டி, அருளாயன்பேட்டையைச் சேர்ந்தவர் விமல்ராஜ், 25; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, கிண்டி தொழிற்பேட்டை சாலையில் நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், விமல்ராஜ் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement