dinamalar telegram
Advertisement

அஞ்சல் ஊழியர்கள் கவுரவிப்பு

Share
சென்னை- -சென்னை மண்டல அஞ்சல் துறையில் கொரோனா தொற்று காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, 89 அதிகாரிகள், அலுவலர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.தமிழக அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலத்தில் 12 கோட்டங்கள், 31 துணை கோட்டங்கள், 20 தலைமை, 544 துணை, 1,624 கிளை தபால் அலுவலகங்கள் செயல்படுகின்றன.அதில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலக்கட்டத்தில், சென்னை மண்டல அளவில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை, தி.நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடந்தது.தமிழக இளைஞர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை செயலாளர் அபூர்வா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கிப்பேசியதாவது:கொரோனா தொற்று காலக்கட்டத்தில் முன் களப்பணியாளர்களைப் போலவே, அஞ்சல் துறை அலுவலர்களின் பணியும் மிகவும் பாராட்டத்தக்கது. தபால் மட்டுமின்றி மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் பொதுமக்களுக்குக் கொண்டு சென்றனர். கல்வியறிவு இல்லாத கிராமத்துக்குத் அஞ்சல் ஊழியர்கள்தான் இன்றும் வழிகாட்டியாக உள்ளனர்.இவ்வாறு கூறினார்.விழாவில், சிறப்பாகச் செயல்பட்ட அலுவலகங்கள், அதிகாரிகள், அலுவலர்கள் என, 26 பிரிவுகளில், 89 விருதுகள் வழங்கப்பட்டன. வருவாய் அதிகம் ஈட்டிய தாம்பரம் அஞ்சலக்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement