dinamalar telegram
Advertisement

கடத்தல், வழிப்பறி ஆசாமிகளுக்கு வலை

Share
கீழ்ப்பாக்கம்-கூடுவாஞ்சேரி, ஆதனுாரைச் சேர்ந்தவர் தமிழ்மணி, 35; மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவர், கீழ்ப்பாக்கம் வெள்ளாள தெருவில், மருந்து மாத்திரைகள் வியாபாரம் செய்யும் வினோத்குமார் சோமாரி, 35, என்பவரிடம், கடந்த செப்டம்பர் மாதம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளார்.அதற்கான பணத்தை கொடுக்காமல், வினோத்குமார் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. பணத்தை கேட்க தமிழ்மணியின் தந்தை சதாசிவம், 65, என்பவர், நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கத்திற்கு வந்துள்ளார்.அப்போது, அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வினோத்திடம் கூட்டி செல்வதாக கூறி, சதாசிவத்தை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.சிறிது துாரம் சென்றதும், அந்த நபர் சதாசிவத்திடம் கத்திமுனையில் தாக்கி, அவரது 1 சவரன் மோதிரம் மற்றும் கை கடிகாரம், 1,000 ரூபாயை பறித்துள்ளார்.இது குறித்து, சதாசிவம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, வினோத்குமாரின் துண்டுதல் பெயரில் அவரது கூட்டாளிகள், வழிப்பறியில் ஈடுபட்டார்களா என விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement