dinamalar telegram
Advertisement

கைதியிடம் போன் பறிமுதல்

Share
புழல்--புழல் மத்திய சிறையில், கைதியிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அரும்பாக்கம், ராணி அண்ணா நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 37, என்பவர், டி.பி., சத்திரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சிக்கி, புழல் மத்திய சிறையில் தண்டனை பெறுகிறார். அவர், மொபைல் போன் பயன்படுத்துவதாக, சிறைத்துறை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று காலை, அவரது அறையை சோதனையிட்ட போது, அங்குள்ள மின் இணைப்பு பெட்டியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் சிக்கியது. இது குறித்து, சிறை அலுவலர், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement