dinamalar telegram
Advertisement

தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதி 4 பெண்கள் உட்பட ஐவர் படுகாயம்

Share
மாதவரம்--மாதவரம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதிய விபத்தில், இரு சக்க வாகனத்தில் சென்றவர்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்தனர்.சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த பெரிய மாத்துார், காமராஜர் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு சந்திப்பில், நேற்று மாலை 3:45 மணிக்கு, வேகமாக சென்ற, 'இனோவா' கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும், அந்த இடத்திற்கு அருகே, வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த, பெண்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இதையடுத்து, கார் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஸ்டான்லியில் சிகிச்சைஇந்த பயங்கர விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த,பெரிய மாத்துார் காமராஜர் சாலையை சேர்ந்தமகேஷ் குமார், 42; அவரதுமனைவி கலா, 36ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும், அங்குள்ள வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த, அதே பகுதி பெருமாள் கோவில்தெருவை சேர்ந்த சாந்தி, 36; சுகுணா, 41; அவரது மகள் கலைச்செல்வி, 15; ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அனைவரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, விசாரிக்கும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தப்பி ஓடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement