dinamalar telegram
Advertisement

தீபாவளி ஏலச்சீட்டு மோசடி தலைமறைவு பெண் கைது

Share
சென்னை-தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, சுகாதாரத் துறை அதிகாரிகள் உதவியுடன், போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, 46. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா, 42, என்பவரும், 2019ல், கொடுங்கையூரில், தீபாவளி ஏலச்சீட்டு மற்றும் தங்க நகை சேமிப்பு திட்டம் நடத்தி 78.13 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.இதுகுறித்து, கொடுங்கையூர் காந்தி நகரைச் சேர்ந்த பிரேமா உள்ளிட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த, ஈஸ்வரி மற்றும் சசிகலாவை தேடி வந்தனர்.இந்நிலையில், அக்., 20ல், ஈஸ்வரியை கைது செய்தனர். சசிகலா தங்கி இருக்கும் இடம் குறித்து விசாரித்து வந்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சசிகலா, தடுப்பூசி செலுத்தியிருக்கலாம்; அந்த தரவுகளின் அடிப்படையில் அவரை கண்டுபிடிக்கலாம் என, போலீசாருக்கு எண்ணம் தோன்றியது. அதன் படி, சுகாதாரத்துறையின் உதவியை நாடினர். அவர்கள் அளித்த தகவல்களின் படி, காஞ்சிபுரத்தில், அரசு பள்ளி ஒன்றில் நடந்த முகாமில், சசிகலா, தன் ஆதார் எண்ணை பதிவு செய்து, தடுப்பூசி செலுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தேடுதல். வேட்டை நடத்தி, சசிகலாவை நேற்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement