dinamalar telegram
Advertisement

சஸ்பெண்ட் ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Share
திருப்போரூர்-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முட்டுக்காடு ஊராட்சி செயலர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை அடுத்த, வளர்ந்து வரும் புறநகர் பகுதியான திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில், ஏழுமலை, 43, என்பவர் செயலராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகார் வந்தது.இதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன் ஏழுலையை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் பணியிடை நீக்கம் செய்தார். இந்நிலையில், ஏகாட்டூர், பழண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏழுமலையின் வீட்டில், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., யுவராஜ், ஆய்வாளர் அனிதா தலைமையில் எட்டு பேர் குழுவினர், நேற்று காலை 7:40 மணியிலிருந்து இரவு வரை சோதனை செய்தனர்.வீட்டில் இருந்த வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஏழுமலையிடம் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement