dinamalar telegram
Advertisement

வடிகால் மீது சாய்வு தளம், கார் நிறுத்தம் ஆழ்துளை மூடியை அகற்றி அட்டகாசம்

Share
Tamil News
சென்னை--அடையாறு மண்டலத்தில், மழை நீர் வடியாத வடிகால்களை வார்டு பொறியாளர்கள் ஆய்வு செய்ததில், ஆழ்துளை மூடியை அகற்றி, அதன் மீது சாய்வு தளம், கார் நிறுத்தம் அமைத்தது தெரியவந்துள்ளது. இந்த சட்டவிரோத பணிகளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பல தெருக்களில், மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. சாலையின் அகலத்தை பொறுத்து, ஒன்றரை அடி முதல் 3 அடி அகலம் வரை வடிகால் கட்டப்பட்டுள்ளது.இதில், துார் வாரும் வகையில், 18 அடி இடைவெளி வீதம், ஆள்துளை மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுபோக, சாலையில் வடியும் மழை நீர், வடிகாலில் விழும் வகையில், குறிப்பிட்ட இடைவெளியில், ஒரு அடி சுற்றளவு கொண்ட இரும்பு ஜாலிகள் பதிக்கப்பட்டுள்ளன.சில இடங்களில், முறையாக துார் வாராததால், ஜாலிக்குள் மண், குப்பை அடைத்துள்ளது. இதனால், மழை நீர், முறையாக வடிகாலில் செல்லவில்லை. கள ஆய்வுஇது குறித்து, மழை நீர் வடியாத வடிகால்கள், வடிகால் இருந்தும் சாலையில் மழை நீர் தேங்கிய பகுதிகளை, வார்டு பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.வடிகால் மீது வீட்டுக்கு சாய்வு தளம் மற்றும் கார் நிறுத்தம் அமைக்க, ஆழ்துளை மூடி, இரும்பு ஜாலி பெயர்க்கப்பட்டது, கள ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆழ்துளை மூடியை அகற்றி, அதன் மீது சிலாப் போட்டு மூடி, உயரமாக வீட்டுக்கு சாய்வு தளம் அமைத்துள்ளனர்.சிலர் ஏற்கனவே இருக்கும் ஆழ்துளை மூடியை உயர்த்தி வைத்து, வடிகால் மீது சாய்வு தளம், கார் நிறுத்தம் அமைத்துள்ளனர். இதனால், துார் வார முடியாமல், ஐந்து ஆண்டுக்கு பின் கட்டிய பல வடிகால்களில் மழை நீர் வடியாதது தெரியவந்தது.அதுவும், புதிதாக நியமித்த வார்டு பொறியாளர்களால் தான், இந்த சட்டவிரோத செயல், வெளியே தெரியவந்ததாக உயர் அதிகாரிகள் கூறினர்.இதையடுத்து, 18 அடி இடைவெளியில் இல்லாத ஆழ்துளை மூடிகள் மற்றும் பெயர்த்தெடுக்கப்பட்ட இரும்பு ஜாலிகள் குறித்து கணக்கெடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.மாநகராட்சி அனுமதி இல்லாமல், ஆழ்துளை மூடிகள் மற்றும் இரும்பு ஜாலிகளை அகற்றிவர்கள் மீது, மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement