dinamalar telegram
Advertisement

மழை நெற்பயிர்கள் நாசம்

Share
மணலி-கொட்டித்தீர்த்த கனமழைக்கு, மணலி சுற்றுவட்டார பகுதிகளில், நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள், மழை நீரில் மூழ்கியுள்ளது.சென்னை மாநகராட்சி, மணலியின், 16, 17வது வார்டுகளில் விவசாயம் நடக்கிறது. இங்கு, நெல், வாழை, கீரை வகைகள் மற்றும் தர்பூசணி, முலாம் பழம், கிரிணி பழம் போன்ற சீசன் பழங்களும் பயிரிடப்படுகின்றன.தற்போது சுற்று வட்டார பகுதிகளில், நெல் மற்றும் வாழை பயிரிடப்பட்டிருந்தன. சமீபத்தில், கொட்டித்தீர்த்த அதி கனமழையால், மணலி சுற்று வட்டார பகுதிகளில், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.குறிப்பாக, ஆண்டார்குப்பம், கண்ணியம்மன்பேட்டை, அரியலுார், தீயம்பாக்கம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை மழை நீர் மூழ்கடித்துள்ளது.நீர் சூழ்ந்து பல நாட்களாகி விட்டதால், பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement