dinamalar telegram
Advertisement

ஆபாச பேச்சு: கண்டித்தவருக்கு கத்திக்குத்து

Share
பல்லாவரம்-சாலையில் நின்று அசிங்கமாக பேசியவரை, தட்டிக் கேட்ட நபருக்கு கத்திக்குத்து விழுந்தது. திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த ராமலிங்கம், 40, நேற்று முன்தினம் இரவு, அருகேயுள்ள மகள் வீட்டிற்கு சென்று, மீண்டும் வீடு திரும்பினார்.அப்போது, அதே தெருவைச் சேர்ந்த அழகுமுத்து, 40, என்பவர், போதையில் சாலையில் நின்று அசிங்கமாக பேசியுள்ளார்.இதை, ராமலிங்கம் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அழகுமுத்து, கத்தியால் அவரது வயிற்றில் குத்தியுள்ளார்.இதில் காயமடைந்த ராமலிங்கம், செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். புகாரை விசாரித்த பல்லாவரம் போலீசார், அழகுமுத்துவை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement