dinamalar telegram
Advertisement

ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர் அகற்றம்

Share
கோடம்பாக்கம்-ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்களுக்கான சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை, மின் மோட்டார் வாயிலாக மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக அகற்றினர்.சென்னையில் பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மேலும், பிரதான சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கியது.இதில், 15ம் தேதி கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள், மின் மோட்டார் வாயிலாக, சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர். தற்போது, இரு நாட்களுக்கு முன் பெய்த மழையில் மீண்டும் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் மூடப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார் உதவியுடன், சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை நேற்று முழுமையாக அகற்றினர்.இருந்தும், சுரங்கப்பாதையில் தேங்கிய சேறும், சகதிகளும் அகற்றப்படாததால், இருசக்கர வாகனங்கள் செல்ல தடை நீடிக்கிறது. முழுமையாக சுத்தம் செய்த பின், இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement