dinamalar telegram
Advertisement

சாலை விபத்தில் காவலாளி பலி

Share
மெரினா, நவ. 26--திருவல்லிக்கேணி, வி.ஆர்., பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, 55; காவலாளி. நேற்று முன்தினம் காலை, சைக்கிளில் காமராஜர் சாலையில், காந்தி சிலை அருகே சென்ற போது, வேகமாக வந்த 'மாருதி ஷிப்ட்' கார் இவர் மீது மோதியது.படுகாயமடைந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு, ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.அண்ணாசதுக்கம் போலீசார் விசாரித்து, விபத்து ஏற்படுத்திய மயிலாப்பூர், பி.எஸ்., சிவசாமி சாலையைச் சேர்ந்த ஷியாம் ராகவ், 19, என்பவரை, நேற்று கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். ஷியாம் ராகவ், சி.ஏ., படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement