dinamalar telegram
Advertisement

ஆவணங்களில், 17 ஏக்கர் உள்ள ஏரி, ஆக்கிரமிப்புகளால் சுருங்கி தற்போது 3 ஏக்கருக்கும் குறைவாக உள்ளது

Share
ராமாபுரம்---வளசரவாக்கம் மண்டலம் 155வது வார்டில் ராமாபுரம் ஏரி அமைந்து உள்ளது. வருவாய் துறை ஆவணங்களில், 17 ஏக்கர் உள்ள ஏரி, ஆக்கிரமிப்புகளால் சுருங்கி தற்போது 3 ஏக்கருக்கும் குறைவாக உள்ளது.கடந்த 2019 ஜூலையில் ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை, 88.86 லட்சம் ரூபாய் மதிப்பில் துார் வாரி, கரை சீரமைக்கும் பணியில், மாநகராட்சியின் மழை நீர் வடிகால் துறை ஈடுபட்டது.தொடர்ந்து, ஏரியில் கரை சீரமைப்பு, இருக்கைகளுடன் கூடிய நடைபாதை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. மேலும், பாரதி சாலையில் இருந்து மழை நீர் ஏரிக்குள் செல்ல வடிகால் அமைக்கப்பட்டது.இதன் காரணமாக சமீபத்தில் பெய்த மழையில் ராமாபுரம் ஏரி நிரம்பிஉள்ளது.ஆனால், முறையான பராமரிப்பின்றி, ஏரியின் ஒரு பகுதி முழுதும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளால் நிறைந்து உள்ளன. மேலும், ஏரியை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதையை ஒட்டி செடி கொடிகள் மண்டி காணப்படுகின்றன.இதனால் ஏரிக்கரையில் பொழுதுபோக்க வரும் முதியோர் வருகை குறைந்துள்ளது.மேலும் இப்பகுதியில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளில் படையெடுத்து வருவதாக பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதேபோல், ஏரி முகப்பில், 84 லட்சம் ரூபாய் செலவில், பூங்கா, நடைபாதை, வாலிபால், பேட்மின்டன், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement