dinamalar telegram
Advertisement

ரூ.125 கோடி அரசு நிலம் ஸ்ரீபெரும்புதுாரில் மீட்பு

Share
காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 125 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை, மாவட்ட நிர்வாகம் அதிரடியாக மீட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா கிளாய் கிராமத்தில், ஏரி கலங்கல் பகுதிக்கு அருகிலேயே, 12.5 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வருவாய் துறையினர், அங்கு சென்று, பழைய வரைபடங்களை வைத்து அளவீடு செய்தனர். இதில், ஓடையை ஆக்கிரமித்து ஒரு கேன்டீன், ஒரு கோவில் ஆகியவை இருப்பது தெரிந்தது. இதையடுத்து இடத்தை மீட்கும் நடவடிக்கையில், வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் கூறியதாவது:------------------------------ஏரியில் இருந்து வரும் கலங்கல், ஓடை, கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.கிளாய் ஓடை முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை முழுதும் மீட்டெடுத்து, தண்ணீர் செல்வதற்கான வழிவகை செய்யப்படும். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 125 கோடி ரூபாய்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement