dinamalar telegram
Advertisement

தாம்பரம் மாநகராட்சியின் முதல் கமிஷனர் பதவியேற்பபு

Share
தாம்பரம்--தாம்பரம் மாநகராட்சியின் முதல் கமிஷனராக, இளங்கோவன் நேற்று பதவியேற்றார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தை மையமாக வைத்து, புதிதாக மாநகராட்சி உருவாக்கப்பட்டு, அதற்கான அரசாணை இம்மாதம் 4ம் தேதி வெளியானது.ஈரோடு மாநகராட்சி கமிஷனராக இருந்த இளங்கோவன், தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக நியமித்து, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் நேற்று முன்தினம் மாலை அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, நேற்று மாலை, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில், தாம்பரம் மாநகராட்சியின் முதல் கமிஷனராக இளங்கோவன் பதவியேற்றார். அவரிடம், பொறுப்பு கமிஷனராக இருந்த, லட்சுமணன் மாநகராட்சிக்கான கோப்புகளை ஒப்படைத்தார்.தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்த, செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், பீர்க்கன்கரணை, பெருங்களத்துார், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகளின் அதிகாரிகளுடன், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement