dinamalar telegram
Advertisement

மாசற்ற சைக்கிள் பயணம் மாணவர்களுக்கு அழைப்பு

Share
சென்னை-'சென்னையில் மாசற்ற சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் கவுரவிக்கப்படுவர்' என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னையில் காற்று மாசை குறைக்கும் விதமாக, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு, மாசற்ற பசுமை பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த மாசற்ற சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நற்சான்றிதழும், பள்ளிகளுக்கு விருதும் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் பங்கு பெற ஊக்குவிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலரை, வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.சைக்கிளில் வரும் மாணவர்கள் தலைகவசம் அணிந்து வர வேண்டும். தேசிய மாணவர் படை, சாரணர் படை மாணவர்கள் வாயிலாக, பள்ளிகளுக்கு அருகாமையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி மாணவர்கள் பாதுகாப்பாக வர பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, சென்னை மாநகராட்சி, காவல்துறை ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரையிலும் மாணவர்கள் நேரம் என குறிப்பிட்டு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.மாணவர்கள் பள்ளி அருகாமையில், தற்காலிக மிதிவண்டி பாதை அமைத்து மாணவர்கள் என குறிப்பிட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும்.மாணவர்கள் நேரத்தின் போது வாகனம் இல்லாத தெருவென, சில சாலைகளை அறிவித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.பள்ளிக்கு அருகாமையில் பாதுகாப்பான நடைபாதை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement