dinamalar telegram
Advertisement

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் குறைப்பு

Share
சென்னை-ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் கட்டணம், 10 ரூபாயாக குறைக்கப்பட்டது.கொரோனா தொற்று பரவாமலிருக்க, இவ்வாண்டு துவக்கத்தில் சென்னை ரயில்வே கோட்டத்தில், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி நிலையங்க ளில் நடைமேடை கட்டணம், 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.கட்டண உயர்வால், பயணியர் சமூக இடைவெளி பின்பற்ற ஏதுவாக இருக்கும். என்ற நோக்கில், இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.தற்போது, கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், இந்நிலையங்களில் நடை மேடை கட்டணம், நேற்று முதல் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement