dinamalar telegram
Advertisement

தக்காளி தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

Share
சிக்கபல்லாபூர்-தக்காளி தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் தோட்ட உரிமையாளரை அடித்து கொலை செய்தனர். சிக்கபல்லாபூர் கவுரிபிதனுார் அருகே உள்ள சிரகமட்டேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் ராவ், 45. இவர் தன் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், அதை காப்பாற்ற தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளார்.இதை அறியாத அதே கிராமத்தை சேர்ந்த வசந்த ராவ், 29 என்பவர், நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு சென்றார். அப்போது மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த வசந்தராவ் குடும்பத்தினர், அஸ்வத் ராவ் வீட்டுக்குள் சென்று அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். படுகாயம் அடைந்த அஸ்வத் ராவும் உயிரிழந்தார். இதனால் கிராமத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது. மஞ்சேனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement