dinamalar telegram
Advertisement

மனைவி மீது, சந்தேகமடைந்து கொலை செய்த கணவருக்கு, ஆயுள்

Share
துமகூரு-பண்டிகைக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மீது, சந்தேகமடைந்து, அவரை கொலை செய்த கணவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மதுகிரி 4வது கூடுதல், செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.துமகூரு மதுகிரி மத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். 2014 செப்டம்பர் 2ல், இவரது மனைவி, கவுரி பண்டிகைக்காக தாய் வீடு சென்றிருந்தார். இவர் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மனைவியுடன் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.ஹரிஷை கைது செய்த கொரடகரே போலீசார், மதுகிரி 4வது கூடுதல், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில், இவரது குற்றம் நிரூபணமானதால், இவருக்கு ஆயுள் தண்டனை, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தாரகேஸ்வர கவுடா பாட்டீல், நேற்று தீர்ப்பளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement