dinamalar telegram
Advertisement

பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய நடைபாதை, பெஸ்காம் பணிகளால் மீண்டும் சிதிலம்

Share
பெங்களூரு- -பெங்களூரு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய நடைபாதை, பெஸ்காம் பணிகளால் மீண்டும் சிதிலமடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் பல்வேறு வணிக வீதிகளிலும், குடியிருப்புகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.ஆனால் அரசு துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லாமல் பல்வேறு துறையின் சார்பிலும், புதிதாக போடப்படும் சாலை, அல்லது கட்டமைப்புகள் சிதிலமாவது தொடர்ந்து நடக்கிறது.தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெங்களூரின் ரேஸ் கோர்ஸ் பகுதியில், சைக்கிள் ஓட்டிகளுக்கான பாதை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. அதிகமான சைக்கிள் ஓட்டிகள் இயக்கப்படும் இந்த ரோட்டில் இத்தகைய கட்டமைப்பை, பலரும் வரவேற்றனர். சைக்கிள் ஓட்டிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளித்தது. புதிதாக அமைக்கப்படும் பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை துறை, பராமரிப்பு பணிகளுக்காக பள்ளம் தோண்டியுள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் முதன்மை பொறியாளர் விநாயக் கூறியதாவது:மாநகராட்சி நிர்வாகத்துடன் மற்ற துறைகளுக்கு ஒருங்கிணைப்பு இல்லாதது தான் இப்பிரச்னைக்கு காரணமாக உள்ளது. இதுபோல வரும் நாட்களில் நிகழாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஒப்பந்ததாரர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையை சரிசெய்து, பாதையை சீராக்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் அதற்கான அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement