கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையாலும், தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் பலஇடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடவு செய்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 10 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் வீடுகள் இடிந்தன. ஆங்காங்கே சாலை பெயர்ந்து ஜல்லிகள் தெரிகின்றன.வெள்ள சேதங்களுக்கு கூடுதல் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கைவிடுத்தது.
அதையொட்டி தமிழகத்தில் வெள்ள சேதங்களைப் மத்திய குழு பார்வையிட்டது.கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தில் அமைத்திருந்த புகைப்பட கண்காட்சியை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.பின், வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ முழுவதையும் மத்திய குழுவினர் பார்த்தனர். மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மத்திய குழுவிடம் கலெக்டர் பாலசுப்ரமணியம் அளித்த விவரம்:கடலுார் மாவட்டத்தில் 8800 கி.மீ., சாலைகள் உள்ளன. மழை மற்றும் வெள்ளத்தால் 350 கி.மீ., சாலைகள் பாதித்துள்ளன. கனமழைக் காரணமாக 62 கட்டங்கள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் பல இடங்களில் 3 பாலங்கள்சேதமடைந்துள்ளன. சம்பா நெல் நடவு செய்துள்ள பகுதிகளில் 4300 ஏக்கர் நெல் தண்ணீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்துள்ளன.
3000 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் குண்டும் குழியுமாக மாறின. இது தவிர 3,000 குடிசைகள் கனமழையால் முழுவதும் சேதமடைந்துள்ளன. நகரம் மற்றும் கிராமங்களில் 950கால்நடைகள் இறந்தன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத மீனவர்களுக்கு வருவாய் பாதித்துள்ளது. மொத்தத்தில் கடலுார் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது, என விளக்கினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!