dinamalar telegram
Advertisement

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Share
குள்ளஞ்சாவடி-குள்ளஞ்சாவடியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். குறிஞ்சிப்பாடி , குள்ளஞ்சாவடி முகாம்களில் வசிப்பவர்களுக்கு காஸ் இணைப்பு உட்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குள்ளஞ்சாவடி தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் பாலசுப்ரமணியம், கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்வடிவு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீரா, குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையது அபுதாகிர், அம்பலவாணன்பேட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ஆயிக்குப்பம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். முன்னதாக கலெக்டர் பாலசுப்ரமணியம் குள்ளஞ்சாவடி முகாமிற்கு சென்று, அங்கு வசிப்போரிடம் கலந்துரையாடினார். குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் தலைமையிலான மருத்துவ குழுவினர், 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement