dinamalar telegram
Advertisement

வீட்டிற்குள் புகுந்த குளத்து நீர்:

Share
Tamil News
பெண்ணாடம்-தொடர் கனமழை காரணமாக, பெண்ணாடத்தில் குளத்து நீர் வீட்டிற்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.பெண்ணாடம் பேரூராட்சி, மேட்டுத்தெருவில் ஒன்றரை ஏக்கர் பரப்பில் பேரூராட்சிக்கு சொந்தமான குளம் பல ஆண்டுகளாக துார் வாராததால் சமீபத்தில் பெய்த தொடர் கனமழைக்கு முழுஅளவு நிரம்பி உள்ளன.குளத்தின் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.நேற்று காலை முதல் பெண்ணாடம் பகுதியில் தொடர் கனமழை பெய்ததால் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. மாலை 6:00 மணியளவில் தாழ்வான பகுதியில் உள்ள வேலாயுதம் வீட்டிற்குள் குளத்து நீர் புகுந்தது.அப்பகுதி இளைஞர்கள், மக்கள் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றினர். குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற வடிகால் வசதியின்றி தண்ணீர் தெருவிலும் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து இரவு முழுவதும் கனமழை பெய்தால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement