dinamalar telegram
Advertisement

வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு

Share
புவனகிரி-கீரப்பாளையம் ஒன்றியத்தில் மழையால் பாதித்த வயல்களில் வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.கீரப்பாளையம் வட்டார வேளாண்மை துறை சார்பாக மழையால் பாதித்த வயல்களை வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) பிரேம் சாந்தி ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட வயல்களில், தேங்கி நிற்கும் தண்ணீரை வடிகட்டி உரமிடுதல் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை தெரிவித்தார்.வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, துறை சார்ந்த திட்டங்களை தெரிவித்தார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் அட்மா திட்ட இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்த செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தேவேந்திரன், சரவணன் வேளாண்மை துணை அலுவலர் கோபி, உதவி வேளாண்மை அலுவலர்கள். வெங்கடேசன், சிவகுமார், ராஜ்பாபு, புகழேந்தி, முத்து சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement