dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Share
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றிய அதிகாரிகள், இருவருக்கு உடனடியாக பட்டா வழங்கினர்.விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் உள்ள செங்குளம் ஏரியின் கரைபகுதியில், 10 பேர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுஜாதா, மலர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் ஏதுமின்றி ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் வசித்த தனம் சக்திவேல், லட்சுமி பாலா ஆகியோருக்கு உடனடியாக வீட்டு மனைப்பட்டாவை தாசில்தார் சிவக்குமார் வழங்கினார். அரசு வீடு கட்டித்தர பரிந்துரை செய்யப்பட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாள் முருகன், ஊராட்சி செயலாளர் சாமிவேல், பி.டி.ஓ., காமராஜ் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement