dinamalar telegram
Advertisement

ஆதார், மொபைல் எண் இணைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு

Share
விருத்தாசலம்-அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் ஆதார், மொபைல் எண் இணைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விருத்தாசலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் செய்திக்குறிப்பு: அனைத்து புதன் கிழமைகளிலும் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் அஞ்சலக சேமிப்பு கணக்கில் ஆதார் மற்றும் மொபைல் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடக்கிறது.அனைத்து சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களும், கணக்கு வைத்துள்ள அஞ்சலகங்களுக்கு சென்று ஆதார், மொபைல் எண்ணை இணைத்து பயன்பெறலாம். கிளை அஞ்சலகங்களில் கணக்கு துவங்கியவர்கள் துணை அஞ்சலகத்தை அணுகலாம்.இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் கணக்கு பரிவர்த்தனைகளை குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.,) தெரிந்து கொள்ளலாம். வேறு யாரும் நமது கணக்கில் பரிவர்த்தனை செய்ய முயல்வதை கண்காணிக்கலாம். வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார், மொபைல் எண்ணை இணைக்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement