dinamalar telegram
Advertisement

தொழிற்சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

Share
கடலுார்-பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து, கடலுாரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மூன்று வேளாண் சட்டங்களை முறைப்படி லோக்சபா மூலம் திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்கும் முடிவை கைவிடவேண்டும்.பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். முதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளர் சட்டங்களை ரத்த செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடலுார் தலைமைதபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தொ.மு.ச., செயலாளர் பொன்முடி தலைமைதாங்கினார்.மாநில துணைத்தலைவர் கருப்பையன், ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் குளோப் பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement