dinamalar telegram
Advertisement

மனு நீதி நாள் முகாம்

Share
ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூரில் நடந்த மனு நீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூரில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகமது அசேன்தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் கலாவதி சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.ஆர்.டி.ஓ.,ரவிபங்கேற்று மனுக்கள் பெற்றார். முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை,பட்டா மாற்றம் உள்ளிட்ட ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.ஸ்ரீமுஷ்ணம்ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. பாலகிருஷ்ணன், ஸ்ரீமுஷ்ணம் உதவி வேளாண்மை இயக்குனர் ஆறுமுகம், சமூக பாதுகாப்புதிட்ட தாசில்தார் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார் சசிக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ஆர்.ஐ.,சீத்தாராமன், வி.ஏ.ஓ க்கள் சரத்பாபு, ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement