dinamalar telegram
Advertisement

இல்லம் தேடிக்கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு தேர்வு

Share
விருத்தாசலம்-விருத்தாசலம் வட்டாரத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடந்தது.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. கடந்த 23ம் தேதி முதல், விண்ணப்பித்த தன்னார்வலர்களுக்கு ஆன் லைனில் தேர்வு நடத்தப்படுகிறது. விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை, டி.இ.ஓ., கோகிலா துவக்கி வைத்தார்.வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, பள்ளி துணை ஆய்வாளர் தெய்வசிகாமணி, ஒருங்கிணைப்பாளர் பாலகுருநாதன், செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆசிரியர்கள் அனிதா, சாமிநாதன், கீதா ஆகியோர் தேர்வு கண்காணிப்பாளராக பணிபுரிந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement