dinamalar telegram
Advertisement

சாலை உரிமை தினம்

Share
நெய்வேலி-என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி நகரில் சாலை உரிமை தினம் கடைபிடிக்கப்பட்டது.நெய்வேலிநகரில் பொது மக்கள்பயன்பாட்டில் உள்ள சாலைகள் முழுவதும் என்.எல்.சி.,நகர நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது. இதையொட்டி சாலை உரிமை தினம் அனுசரிக்கப்பட்டது.என்.எல்.சி.,நகர நிர்வாக முதன்மை பொதுமேலாளர் குப்புசாமி துவக்கி வைத்தார். உதவி நகர நிர்வாக அதிகாரி முகமது அப்துல் காதர்,என்.எல்.சி.,போக்குவரத்துத்துறை துணை பொது மேலாளர் ஜோஸ், என்.எல்.சி.,பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை முதன்மை மேலாளர்சிவசுப்பிரமணியன் உடனிருந்தனர்.நெய்வேலி டவுன்ஷிப் எல்லைக்குள் பயணித்த தமிழக அரசின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் வாகனங்களும் இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.அனுமதி சீட்டு பெறாத தனியார் பஸ்கள் நெய்வேலி எல்லைக்குள் அனுமதிக்கவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement