dinamalar telegram
Advertisement

தொ.மு.ச., நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

Share
நெய்வேலி-என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் தொ.மு.ச., நிர்வாகிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் கொடைக்கானலில் நடந்தது.தொ.மு.ச.,பேரவையின் பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். என்.எல்.சி.,தொ.மு.ச., பேரவையின் சார்பில் நடந்த பயிலரங்கத்தில் என்.எல்.சி.,யின் அங்கீகாரம் பெற்ற தொ.மு.ச.,வின் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிலக பகுதிகள், அலுவலகப் பகுதிகளின் துணைத் தலைவர்கள், பகுதி செயலாளர்கள் பங்கேற்றனர். தொ.மு.ச., நிர்வாகிகளுக்கு பேரவையின் பொருளாளர் நடராஜன் சான்றிதழ்கள் வழங்கினார். பேரவையின் செயலாளர் பாரி நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement