dinamalar telegram
Advertisement

முந்திரி மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய கலெக்டர் வேண்டுகோள்

Share
பண்ருட்டி-கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய முந்திரி தினவிழாவை முன்னிட்டு'ஆசியா புக்ஸ்ஆப் ரெக்கார்டு'சாதனைக்காக 627 சதுரடி பரப்பளவில் முந்திரி பயிர்களால் முந்திரிப் பழம், கொட்டையுடன் கூடிய படம் வடிவமைக்கும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட தொழில் மைய மேலாளர் வெங்கடேசன், மாவட்ட வங்கிகளின் மேலாளர் முகிலன், டி.எஸ்.பி.,சபியுல்லா, தாசில்தார் பிரகாஷ், முன்னாள் முந்திரி ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் ராமகிருஷ்ணன், பிரதீபா கேஷ்யூஸ் மாயகிருஷ்ணன், மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முந்திரி வியாபாரிகள்பாரதிதாசன்,மலர்வாசகம், ஜெயமூர்த்தி, ராஜேஷ், சிவா, இளங்கோ, மணிவண்ணன், சிவக்குமார், சங்கர், மதன்சந்த், சக்திவேல் பங்கேற்றனர். சங்க பொருளாளர் செல்வமணி நன்றி கூறினார்.கலெக்டர் பாலசுப்ரமணியம் பங்கேற்று'ஆசியா புக்ஸ்ஆப் ரெக்கார்டு'சான்றிதழை வழங்கி பேசுகையில், பண்ருட்டி முந்திரி உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகத்தில் சிறந்து விளங்குகிறது. முந்திரி தொழில் ஊக்கப்படுத்தவும், தொழில்புரிவோருக்கு வங்கிகள், தொழில்துறையினர் உதவியாக இருக்க வேண்டும்.முந்திரி தொழிலில் புதியதாக தொழில் முனைவோர் ஈடுபட முன் வரவேண்டும். முந்திரி பயிர் மட்டுமின்றி, முந்திரி மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் அதிகளவில் உற்பத்தி செய்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அரசு, மாவட்ட நிர்வாகம் தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் செய்யும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement