dinamalar telegram
Advertisement

மணிமுக்தா அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

Share
கள்ளக்குறிச்சி-சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்திற்காக அமைச்சர் வேலு, தண்ணீர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து அமைச்சர் வேலு கூறியதாவது:வடகிழக்கு பருவமழையினால் கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை 79 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, இன்றைய தினம் மணிமுக்தா அணை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 5,493 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நீர் வரத்திற்கேற்ப தொடர்ந்து அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.இந்த மாவட்டத்தில் கலெக்டரின் ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு வெள்ள சேதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்க வருவாய் துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மணிமுக்தா அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரினை விவசாயிகள் அனைவரும் பாசனத்திற்கு பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., விஜய்பாபு, திட்ட இயக்குனர் மணி, ஆர்.டி.ஓ., சரவணன், வேளாண் இணை இயக்குனர் சுந்தரம், டி.எஸ்.பி., ராஜலட்சுமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் விஜயராகவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பெறியாளர்கள், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், சேர்மன் அலமேலு ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement