dinamalar telegram
Advertisement

திறனறியும் தேர்வில் முதலிடம் மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு

Share
சங்கராபுரம்-திறனறியும் தேர்வில் முதலிடம் பெற்ற சோழம்பட்டு பள்ளி மாணவியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார்.சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி அபிநயா ஸ்ரீ. இவர், சங்கராபுரம் வட்டார வள மையத்தில் 2020-21ம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான திறனறியும் தேர்வில் முதலிடம் பெற்றார். மாணவி அபிநயா ஸ்ரீ தொடர்ந்து 7 ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை கள்ளக்குறிச்சி எ.கே.டி., பள்ளியில் இலவசமாக படிப்பதற்கான உத்தரவினை மாணவியிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வழங்கி பாராட்டினார். மாணவியின் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement