சாலையின் நடுவே இருந்த டிரான்ஸ்பார்மர் அகற்றம்
கள்ளக்குறிச்சி-'தினமலர்'நாளிதழ்செய்தி எதிரொலியாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவே இருந்த டிரான்ஸ்பார்மர்அகற்றப்பட்டது.கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனை, திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர், பள்ளிக்கூடம், உழவர் சந்தை ஆகியன உள்ளன.இந்த தெருவில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சாலையை அடைத்தபடி டிரான்ஸ்பார்மர் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர். டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றிட அப்பகுதி மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். எந்த நடவடிக்கையும் இல்லை.இந்த தெருவில் சில தினங்களுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. அப்போதும் டிரான்ஸ்பார்மர் அகற்றப்படவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.இதுகுறித்து'தினமலர்'நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து டிரான்ஸ்பார்மரை அகற்றி அருகில் உள்ள உழவர் சந்தை பகுதியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!