dinamalar telegram
Advertisement

அரசு பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

Share
கச்சிராயபாளையம்-கோமுகி அணை அரசு நலத்துறை பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல் நிலை பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை1000க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.இப்பள்ளியில் உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆய்வுசெய்து,பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் விடுதிக்கு சென்று மாணவர்களுக்கு தயார் செய்யப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார்.தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். துணை கலெக்டர் பிரகாஷ்வேல், மாவட்ட கவுன்சிலர் அகிலாபானு அருள் உட்பட அரசு அதிகாரிகள் உடணிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement