dinamalar telegram
Advertisement

கிரைம் செய்திகள்...

Share
சாராயம் விற்றவர் கைதுசங்கராபுரம்: தியாகராஜபுரத்தில் சப் இன்ஸ்பெக்டர் திருமால் சாராய சோதனை மேற்கொண்டார். அப்போது தியாகராஜபுரம் ஏரிக் கரையில் சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 40; என்பவரை கைது செய்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.ஆற்றில் விழுந்தவர் பலிசங்கராபுரம்: காட்டு வனஞ்சூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 65; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன் தினம் இரவு சங்கராபுரம் மணி நதி கரையோரம் இயற்கை உபாதைக்காக சென்றவர் கால் கழுவும்போது ஆற்றில் தவறி விழுந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவரது உடல், செட்டியந்துார் அணைகட்டில் கரை ஒதுங்கியது.சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தீக்குளித்த பெண் சாவுஅவலுார்பேட்டை: அரியலுார் திருக்கை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சுதா, 35: இவருக்கு 2 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த அவர், கடந்த 19ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சுதா இறந்தார். கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மகள் மாயம்: தாய் புகார்விழுப்புரம்: காணை அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகள் ஆரோக்கிய கலையரசி, 24; பி.இ., படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரை 22ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் நச்சத்திரமேரி அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.குட்கா விற்றவர் கைதுவிழுப்புரம்: டவுன் போலீசார், கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுல்தான் மைதீன், 35; என்பவர் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, 8.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.மணல் கடத்தியவர் கைதுவிழுப்புரம்:தாலுகா போலீசார் ஊழியர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி மணல் கடத்தி வந்த இரண்டு சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, மணல் கடத்திய பி.குச்சிப்பாளையத்தை சேர்ப்த பத்மநாபன், 37; என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தை தேடிவருகின்றனர்.பைக் பறிப்பு: 4 பேருக்கு வலை விழுப்புரம்: பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; இவர், புதுச்சேரி மாநிலம் திருக்கனுார் அடுத்த தெள்ளிபட்டு கிராமத்தில் உள்ள செங்கல் சூளை பணிக்காக பைக்கில் சென்றார். விழுப்புரம் அடுத்த சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க நபர், லிப்ட் கேட்பது போல் வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து, அவருடன் இருந்த மற்ற அடையாளம் தெரியாத 3 பேர் மணிகண்டனை கீழே தள்ளிவிட்டு, பைக் மற்றும் மணிகண்டனின் மொபைல் போனை பறித்துச் சென்றனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு செஞ்சி: மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமார் 28; இவர், கடந்த 6ம் தேதி மாலை செஞ்சியில் இருந்து விதை நெல் வாங்கிக் கொண்டு பைக்கில் வந்தார். மட்டப்பாறை சுடுகாடு அருகே வந்த போது பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பாடுகாயம் அடைந்த அவர், சென்னை ராஜிகாந்தி அரசு மருத்துவக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ஐ.,க்கு மிரட்டல்: வாலிபர் கைது செஞ்சி: சத்தியமங்கலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூங்காவனம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஆலம்பூண்டி கூட்ரோட்டில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஆலம்பூண்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சுபாஷ், 26; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனத்திடம் தகராறு செய்து, திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து சுபாஷை கைது செய்தனர். மகன் மாயம்: தாய் புகார்விழுப்புரம்: காணை அருகே கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் மகன் சரண்ராஜ், 22; இவர் கடந்த ஓராண்டு முன்பு அதே ஊரைச் சேர்ந்த உத்திரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரண்ராஜை கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சந்திரா அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement