dinamalar telegram
Advertisement

சங்கராபுரம் ஒன்றிய கூட்டம்

Share
சங்கராபுரம்-சங்கராபுரம் ஒன்றிய முதல் கூட்டம் ஒன்றிய கூடத்தில் நடந்தது.சேர்மன் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேல் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் பங்கேற்று பேசினார்.கூட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது. பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவரிராஜன், ஜெகநாதன், அய்யப்பன், பொறியாளர்கள் ராஜ கோபால், சித்ரா, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் சுகன்யா சுரேஷ் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement