dinamalar telegram
Advertisement

கரும்பு வயல்களில் வடிகால் வசதி: ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை

Share
விக்கிரவாண்டி-விவசாயிகள் தங்கள் கரும்பு வயல்களில் வடிகால் வசதி ஏற்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும் என ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை வழங்கியுள்ளது.ஆலையின் கரும்பு அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி துறை செய்திக்குறிப்பு:தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி மழை நீர் ஓடைகளின் வழியாக வெளியேறி வருகிறது.பெரும்பாலான கரும்பு வயல்களில் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை மழை நீர் தேங்கியுள்ளது.தொடர்ந்து கரும்பு வயல்களில் மழைநீர் தேங்கியிருந்தால், காற்றோட்டம் தடைபட்டு கரும்பு பயிரின் வேர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். மேலும், மண்ணிலிருந்து சத்துக்களை உறிஞ்ச முடியாமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள கரும்பு வயல்களில் மழைநீர் தேங்கியிருந்தால் விதை கரும்பின் முளைப்புத் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்.கரும்பு வயலைச் சுற்றி ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் எடுப்பதன் மூலம் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் விரைவாக வடியும்.எனவே கரும்பு விவசாயிகள் தங்கள் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிக்க தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்தி மகசூல் இழப்பை தவிர்த்திட வேண்டுகிறோம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement