dinamalar telegram
Advertisement

கத்திரி, மரவள்ளி சேதம்

Share
விழுப்புரம்-மழையால் சேதமடைந்த கத்திரி, மரவள்ளி பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம், நரையூரில் தொடர் மழையால் கத்திரி மற்றும் மரவள்ளி பயிர்கள் சேதமடைந்தது. பாதிப்புகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பயிர் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அரசிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆய்வின்போது, துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் இளநங்கைதாரகை, வி.ஏ.ஓ., வினோத் உடனிருந்தனர்.மயிலம்மயிலம் பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதுபோன்று மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற மலர் செடிகளும் நீரில் மூழ்கி அழுகியது.கிராம நிர்வாக அலுவலர் விநாயகம், மயிலம் வட்டார உதவி வேளாண் அலுவலர் ராஜசேகர் மற்றும் உதவியாளர் ராஜ்கமல் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement